உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தெருவில் ஓடும் கழிவுநீர் தொற்று அபாயத்தில் மக்கள்

தெருவில் ஓடும் கழிவுநீர் தொற்று அபாயத்தில் மக்கள்

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெருவில், 110 குடும்பங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் இதுவரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில், மழைநீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் சென்று வருகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை