உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலத்தை அகலப்படுத்த கோரி குவிந்த கும்மிடிப்பூண்டி மக்களால் பரபரப்பு

பாலத்தை அகலப்படுத்த கோரி குவிந்த கும்மிடிப்பூண்டி மக்களால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டுத் தெரு செல்லும் சாலையின் குறுக்கே, ஏரிகளின் உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மீது இருந்த தரைப்பாலம் சேதமடைந்ததால், அந்த இடத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் சிறுபாலம் அமைக்கும் பணிகளை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.கடந்த மாதம் பால பணிகள் துவங்கப்பட்ட நிலையில், பாலம் குறுகலாக இருப்பதால், அதை அகலப்படுத்த வலியுறுத்தி, பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இரு வாரங்களுக்கு முன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.நேற்று பாலத்தை ஆய்வு செய்த கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், இந்த விவகாரம் தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தில் மக்களை சந்தித்து பேசினார்.அப்போது, எம்.எல்.ஏ.,விடம் குறைகளை தெரிவிக்க, நுாற்றுக்கணக்காக மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், 5 மீ., அகலத்திற்கு திட்டமிடப்பட்ட பாலம், 8 மீட்டராக அகலப்படுத்த எம்.எல்.ஏ., உத்தரவிட்டார்.அதற்கு, 30 லட்சம் ரூபாய் நிதி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்படும் என, எம்.எல்.ஏ., தெரிவித்தார்.அது தொடர்பான கடிதம், திருவள்ளூர் கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. சமாதானம் அடைந்த பகுதிவாசிகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.l கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே சிறுவாடா கிராமம் உள்ளது. அங்கு, 300 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், 180 குடும்பத்தினர், 100 நாள் வேலை பார்த்து வருகின்றனர்.இக்கிராமத்தை சேர்ந்த 50 பெண்கள், நேற்று கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:மூன்று மாதங்களாக, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால், பல்வேறு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முறையாக பதிலளிக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர். அனைவருக்கும், 100 நாள் வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மீதான மனுவை, பி.டி.ஓ., அலுவலகத்தில் வழங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை