உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சவுடு மண் எடுக்க ஏரிக்கரை உடைப்பு லாரிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

சவுடு மண் எடுக்க ஏரிக்கரை உடைப்பு லாரிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

பட்டரைபெரும்புதுார்:பட்டரைபெரும்புதுார் ஏரியில் சவுடு மண் எடுப்பதற்காக அனுமதி வழங்கிய இடத்தை விட்டு, வேறொரு இடத்தில், கரை உடைத்து பாதை அமைத்ததால், கிராம மக்கள் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதுார் ஏரியில் சவுடு மண் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பட்டரைபெரும்புதுார் 'டோல்கேட்' அருகே மண் எடுத்து, அதன் அருகிலேயே வழித்தடம் அமைத்து, திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரிகள் சென்று கொண்டிருந்தன. சில நாட்களாக மழை பெய்து வருவதால், சவுடு மண் குவாரி இயங்காமல் இருந்தது. நேற்று மழை நின்றதால், 'டோல்கேட்' அருகே வழித்தடத்தை பயன்படுத்த முடியாத நிலையில், ஏரி அருகில் விவசாய நிலத்திற்கு செல்லும் சாலையில், 200 மீட்டர் அளவிற்கு கரையை உடைத்து பாதை அமைத்தனர். இதையறிந்த பகுதிமக்கள் மற்றும் விவசாயிகள், நேற்று காலை குவாரியை முற்றுகையிட்டு, மண் எடுக்க வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். 'ஏரியில் இருந்து மண் எடுத்து, 2 கி.மீ., செல்வதால், விவசாய பணி பாதிக்கப்படும்' என, தெரிவித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், வருவாய் மற்றும் காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், தொடர்ந்து சவுடு மண் குவாரி இயங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை