உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீரான குடிநீர் வினியோகம் கோரி மனு

சீரான குடிநீர் வினியோகம் கோரி மனு

ஆர்.கே.பேட்டை:ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், காளிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை என பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குடிநீர் வினியோகத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வியிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை