உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 48 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை மீட்க கோரி கலெக்டருக்கு மனு

48 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை மீட்க கோரி கலெக்டருக்கு மனு

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே, குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது பில்லாக்குப்பம் கிராமம். அந்த கிராமத்தில், சர்வே எண்கள், 806ல், 24.88 ஏக்கர், 1036ல், 24 ஏக்கர் என, மொத்தம், 48.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் இருப்பதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.அதை தனியார் சிலர் ஆக்கிரமித்து, தைல மரங்கள் வைத்திருப்பதாகவும், வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என, கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். நுாறு நாள் வேலை பார்க்கும் பில்லாக்குப்பம் கிராம பெண்கள், மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வருவாய் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள, 48 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மீட்க வேண்டும். அந்த இடத்தில் நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் என, கிராமத்தினர் சார்பில், திருவள்ளூர் கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !