அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு
திருத்தணி, அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில், 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று பள்ளி வளாகத்தில் வேம்பு, தேக்கு, புங்கை உள்ளிட்ட, 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.