உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீடியன் வளைவுகளில் செடிகள், மரண பள்ளங்கள் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை அவலம்

மீடியன் வளைவுகளில் செடிகள், மரண பள்ளங்கள் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை அவலம்

ஊத்துக்கோட்டை, தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் மரண பள்ளங்கள், மீடியன், வளைவுகளில் வளர்ந்துள்ள செடிகள் உள்ளிட்ட பல்லேறு காரணங்களால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன.சென்னை - நெல்லுார் தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் பகுதியில் இடதுபுறம் செல்லும் சாலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை வரை, 31 கி.மீ., துாரத்திற்கு, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இச்சாலையில், பள்ளிகள், கல்லுாரி, பவானியம்மன் கோவில், வங்கி, டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் நிலையம் போன்றவை உள்ளன. சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி, கடப்பா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இச்சாலை வழியே பயணிக்கின்றன.குறிப்பாக, சூளைமேனி கிராமத்தில் இருந்து, வலதுபுறம் செல்லும் சாலையில், தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்கிருந்து மூலப்பொருட்கள் எடுத்து வருதல், தயார் செய்த பொருட்கள் கொண்டு செல்லுதல் என, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.போக்குவரத்து மிகுந்த இச்சாலை, தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை மரண பள்ளங்கள் நிறைந்தும், மீடியன் மற்றும் வளைவுகளில் செடிகள் வளர்ந்தும், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை