உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பவானியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் துாய்மை பணி

பவானியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் துாய்மை பணி

ஊத்துக்கோட்டை:பவானியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல் மற்றும் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்வர். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் துாய்மை இயக்கம் துவக்கப்பட்டு உள்ளது.இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஹிந்து அறநிலையத் துறை ஆகியவை இணைந்து, நேற்று பெரியபாளையம் பவானியம்மன் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பொருட்களை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை, கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்து, 'பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்து, அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்' என்றார். அதன்பின், உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை