மேலும் செய்திகள்
சுகாதார நடவடிக்கைகளால் பறவைகள் இறப்பு இல்லை
05-Sep-2025
பழவேற்காடு:பழவேற்காடு ஏரியில் ஆங்காங்கே சிறு சிறு தீவுப்பகுதிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணியர் , தீவு பகுதிகளுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர் உள்ளிட்டவைகளை வீசி செல்கின்றனர். பறவைகள் சரணாலய பகுதியான தீவுகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால், பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. நேற்று, இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை, நிலையான சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டன. பழவேற்காடு வனத்துறை அதிகாரிகள், திருப்பாலைவனம் காவல் துறை, சீகோ பவுண்டேஷன், பிஸ்லெரி பாட்டில் நிறுவன அறக்கட்டளை, பசுமை பூமி அறக்கட்டளை என, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து, தீவு பகுதிகளில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நீர்நிலைகளின் மேம்பாடு மற்றும் உயிரியல் பன்மையை உறுதி செய்யும் நோக்கத்திற்காக, பழவேற்காடு ஏரியில் உள்ள பறவை திட்டு மற்றும் பேய்திட்டு பகுதிகளில், ஆனைப்புளி, திருவோடு, கொடுக்காப்புளி, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளும், மூலிகை செடிகளும் நடவு செய்யப்பட்டன. முதன் முறையாக, பறவைகள் சரணாலய தீவு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும், இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
05-Sep-2025