உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

கும்மிடிப்பூண்டி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஆந்திர எல்லையோர தமிழக சோதனைச்சாவடியில், போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் முதல்கட்டமாக வரும் ஏப்ரல், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அந்தந்த சட்டசபை தொகுதிகளில் கண்காணிப்பு படையினர் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணித்து வருகின்றனர்.சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திர எல்லையோர தமிழக சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அந்த சோதனைச்சாவடியில், ஆந்திராவில் இருந்து தமிழகம் நுழையும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையிலான போலீசார், வாகனங்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை