காவல் நிலையத்தில் பெண்களை தாக்கிய சம்பவத்தில், போலீஸ் ஏட்டு கைது
திருத்தணி:காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த மூன்று பெண்களிடம் தலைமை காவலர் ராமன், வாங்காமல், அவர்களை தாக்கிய சம்பவத்தில், ராமனை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் பகுதியைச் சேர்ந்த, அருண், சிவாஜி ஆகிய இருவரும்,கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில், மதுமிதா,35, மணிகண்டன்,40, தனம் உள்பட, 6 பேர், எங்களை, தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என புகார் கொடுத்தனர்.தகவல் அறிந்ததும், மணிகண்டன், மதுமிதா, அவரது தோழிகள் தனம்.38, செவ்வந்தி,28 ஆகியோர் நேற்று முன்தினம் காலையில் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சிவாஜி எங்களுக்கு மொபைல் போன்களுக்கு தவறான மெசேஜ் அனுப்புவதாக புகார் கொடுத்தனர்.அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ராமன் புகாரை வாங்க மறுத்ததாக மிதுமிதா கூறியும், தலைமை காவலரை ஒருமையில் பேசியும், அவரது சட்டை பிடித்து இழுத்தால், ஆத்திரமடைந்த காவலர் ராமன் மூன்று பெண்களையும் தாக்கி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.இச்சம்பவத்தால் தலைமை காவலர் ராமனை நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் சஸ்பெண்ட் செய்தார். நேற்று தலைமை காவலர் மீது வழக்கு பதிந்து கனகம்மாசத்திரம் போலீசார் ராமனை கைது செய்தனர்.அதே நேரத்தில், அருண், சிவாஜி கொடுத்த புகாரின் மீது போலீசார், மதுமிதா, மணிகண்டன், ராஜேஷ், தனம், ரவி மற்றும் சந்தோஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஒருதலை பட்சம்: போலீசார் குமுறல்
கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் மதுமிதா, தனம், செவ்வந்தி ஆகியோர், பணியில் இருந்த தலைமை காவலர் ராமனை தரக்குறைவாக பேசியும், அவரது சட்டையை பிடித்து இழுத்தும் கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமன் பெண்களை தாக்கி வெளியேற்றியுள்ளார். இச்சம்பவத்தால் தலைமை காவலர் ராமனை நேற்று முன்தினம் சஸ்பெண்ட், நேற்று கைது செய்யப் பட்டுள்ளார். ஆனால் போலீசாரை தரக்குறைவாக பேசி, மதுமிதா, தனம், செவ்வந்தியை ஏன் போலீசார் கைது செய்யவில்லை. ஒரு தலைபட்சமாக எங்களுது உயர்அதிகாரிகள் செயல்படுகின்றனர் என போலீசார் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.