| ADDED : பிப் 16, 2024 07:29 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது எறையாமங்கலம் ஊராட்சி.இங்கிருந்து நுங்கம்பாக்கம், கம்மவார்பாளையம் வழியாக மேல்நல்லாத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை அருகே சாலையோரம் உள்ள 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக மாறி புதர்மண்டி சாய்ந்த நிலையில் கிடக்கின்றன.இதனால் இந்த சாலை வழியே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் மின்கம்பங்களை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மணவாளநகர் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய மின்கம்பங்கள் வந்துள்ள நிலையில் விரைவில் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றிய அமைக்கப்படும்,' என்றார்.