உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்றம் மற்றொரு பகுதியை சூழும் அபாயத்தால் எதிர்ப்பு

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்றம் மற்றொரு பகுதியை சூழும் அபாயத்தால் எதிர்ப்பு

மீஞ்சூர்: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை, அருகில் உள்ள மற்றொரு குடியிருப்பு பகுதிக்கு வெளியேற்றி வருவதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியது. கலைஞர் நகர் பகுதியை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றுவதற்காக, பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி, குழாய் பதிக்கும் பணிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இவ்வாறு வெளியேற்றும் மழைநீர், நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாவதி நகரை சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பத்மாவதி நகர் குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது: கலைஞர் நகரில் இருந்து மழைநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதியை ஏற்படுத்தாமல், எங்கள் குடியிருப்புகளுக்குள் கொண்டு வருகின்றனர். குடியிருப்புகளை விட, தி.மு.க., பிரமுகரின் திருமண மண்டபத்தை மழைநீர் சூழ்ந்து இருப்பதால், முக்கியத்துவம் தருகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தின் பகுதியை மட்டும் பாதுகாக்க நினைக்கின்றனர். ஊராட்சி பகுதிகள் பாதிப்படைவது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை