உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சியுடன் 2 ஊராட்சிகள் இணைப்பு திருத்தணியில் 4 இடங்களில் மறியல்

நகராட்சியுடன் 2 ஊராட்சிகள் இணைப்பு திருத்தணியில் 4 இடங்களில் மறியல்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைப்பதற்கு, அரசாணை வெளியானது. ஏற்கனவே நகராட்சியுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று காலை திருத்தணி- அரக்கோணம் நெடுஞ்சாலை திருத்தணி புதிய புறவழிச்சாலை மற்றும் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை என மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர்.தகவல் அறிந்ததும், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதனாப்படுத்தி அப்புறப்படுத்தினர்.இதே போல் பட்டாபிராமபுரம் ஊராட்சி சேர்ந்த 20 ஆண்கள் உள்பட, 300க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் 20 ஆண்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.பெண்கள் சாலையில் அமர்ந்ததால் பெண் போலீசார் அவர்களை வலுகட்டயமாக அப்புறப்படுத்தினர். மேலும் அங்கிருந்த ஆண்களை வலுகட்டாயமாக பேருந்தில் ஏற்றியதால், ஆண்களை கைது செய்யக்கூடாது, அவர்களை விடுவிக்க வேண்டும் என பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதில் பெண் ஒருவருக்கு கையில் ரத்தகாயம் ஏற்பட்டது.தொடர்ந்து திருத்தணி தாசில்தார் மலர்வழி, துணை தாசில்தார் தேவராஜ், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் வந்து உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என, சமசரசப்படுத்தினர். ஆனாலும் நான்கு மணி நேரம் சாலையோரம் அமர்ந்து பெண்கள் ஆர்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்தணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சியை சேர்ந்த பெண்கள், 60 பேர் நேற்று தடப்பெரும்பாக்கம் சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், நகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை இழுப்பு, வீட்டு, குடிநீர் வரிகள் அதிகரிப்பு, ஊராட்சி சலுகைகள் பறிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற பொன்னேரி போலீசார் சமாதானம் பேசினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பெண்களை அங்கிருந்து கலைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். சாலை மறியல் போராட்டத்தால், பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ