மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு
13-May-2025
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 123, சமூக பாதுகாப்பு திட்டம் 35, வேலைவாய்ப்பு வேண்டி 63, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் கோரி 25, இதர துறை 68 என, மொத்தம் 314 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், தனித் துணை கலெக்டர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-May-2025