மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 447 மனுக்கள் ஏற்பு
11-Mar-2025
திருவள்ளூர் : திருவள்ளூரில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக - 235, சமூக பாதுகாப்பு திட்டம் - 108, வேலைவாய்ப்பு வேண்டி - 94, அடிப்படை வசதிகள் வேண்டி 153 மற்றும் இதர துறை 146 என. மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.பின், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று, அவர்களது தேவையை நிறைவேற்றுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். எதிர்பார்ப்பு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, மாவட்டம் முழுதும் இருந்து மக்கள் மனு அளிக்க வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் எழுத படிக்க தெரியாதவர்கள்.அவர்கள் மனு எழுதுவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனு எழுதி கொடுப்போர் உதவியை நாடுகின்றனர். ஆனால், மனு எழுதுவோருக்கு இடம் இல்லாததால், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து எழுதுகின்றனர்.இதனால், அங்கு கடும் நெரிசல் நிலவுகிறது. ஏற்கனவே மனு எழுதுவதற்கு அமைக்கப்பட்ட கூடம், உணவகமாக மாறிவிட்டது. எனவே, மனு எழுதுவோருக்கு தனி இடம் ஒதுக்கி தருமாறு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
11-Mar-2025