உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொது// கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்

பொது// கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்

ஆவடி:அம்பத்துார் எஸ்டேட், டெலிபோன் எக்சேஞ்ச் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்துார் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அவரது பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில், கும்பகோணம், நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்த திலவர் அப்துல்லா, 20, என தெரிந்தது.இவர், திருப்பதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, அம்பத்துார் மற்றும் பட்டரவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.கஞ்சாவை பறிமுதல் போலீசார், திலவர் அப்துல்லாவை கைது செய்தனர்.■ பூந்தமல்லி, வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே, வடமாநில நபர் கஞ்சா எடுத்து வருவதாக, பூந்தமல்லி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, அங்கு சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவரது பையில், 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.விசாரணையில், ஒடிசா மாநிலம், கந்தமால் பகுதியைச் சேர்ந்த சுதன்சு பாஹா, 25, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, பூந்தமல்லி பகுதியில் விற்பனை செய்ய இருந்ததும் தெரிந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி