உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புட்லூர் ரேஷன் கடை பஞ்சர் வாடகையில் இயங்கும் அவலம்

புட்லூர் ரேஷன் கடை பஞ்சர் வாடகையில் இயங்கும் அவலம்

திருவள்ளூர்:புட்லுார் ரேஷன் கடை பாழடைந்து சேதமடைந்து விட்டதால், தற்காலிகமாக தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் ஊராட்சியில், 1,500 வீடுகளில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு ரேஷன்கார்டுதாரர்கள் 2,500க்கும் மேற்பட்டோர் உள்ளதால், புட்லுார் கிராமம் மற்றும் காலனி என, இரண்டு இடங்களில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.இதில், 'எண் 01AP163PY' என்ற ரேஷன் கடை, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு, புட்லுார் கிராமம் மற்றும் காலனி என, 700க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், அரிசி, பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்த கட்டடம் பழுதடைந்து சேதமடைந்து விட்டதால், உள்ளிருக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி வந்தது.இதையடுத்து, தற்காலிகமாக இந்த கடை தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால், புட்லுார் கிராமவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, பாழடைந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக ரேஷன் கடை கட்ட வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை