கத்தியுடன் வந்து மாணவரிடம் தகராறு செய்தவரிடம் விசாரணை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த, சாணாபூதுார், அல்லிப்பூக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், பாதிரிவேடு பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில்,11ம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த மாதம், 31ம் தேதி, பேருந்தில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நிற்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுஉள்ளது.இது குறித்து, சானாபூதுார் கிராமத்தை சேர்ந்த மாணவர், தன் 18 வயது சகோதரனிடம் தெரிவித்தார்.நேற்று காலை,தம்பியிடம் பிரச்னை செய்ய மாணவரைதாக்குவதற்காகஅண்ணன் கத்தியுடன் பள்ளிக்கு வந்தார்.பள்ளியில் இருந்த அல்லிப்பூக்குளம் மாணவரிடம் தகராறில்ஈடுபட்டு கத்தியால் தாக்க முற்பட்டார்.இதில், இருவரும்ஒருவரை ஒருவர்தாக்கிக் கொண்டு, காயம் அடைந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக பாதிரிவேடு போலீசார் இருவரிடமும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.