போலி நகை வைத்து மோசடி ராணிபேட்டை நபர் கைது
திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரி, 44. இவர் திருவள்ளூரில் உள்ள முத்துாட் பின்கார்ப் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகை கடன் வழங்கும் பணி செய்து வருகிறார்.கடந்த மாதம் 19ம் தேதி வேலுார் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 34 அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஜான் மற்றும் மற்றொரு நபர் என மூவர் வந்தனர். இதில் விஜயகுமார் பெயரில் 1 செயின், 3 வளையல்கள் என 82.1 கிராம் நகைகளை அடமானம் வைத்து 4 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வாங்கி சென்றனர்.இந்நிலையில் அதே மாதம் 27ம் தேதி தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த நகை பரிசோதிப்பாளர் அங்குள்ள நகைகளை சோதனை செய்தார். அப்போது விஜயகுமார் அடகு வைத்த நகைகள் தங்க மூலாம் பூசப்பட்ட போலியான நகைகள் என தெரிய வந்தது. இதுகுறித்து சங்கரி கொடுத்த புகார்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விஜயகுமாரை நேற்று கைது செய்தனர்.