உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்

முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்

திருவள்ளூர்: முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வீடுகளுக்கு, நாளை மற்றும் நாளை மறுநாள் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரரின் இல்லத்திற்கு, அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யும் பணியை, ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். நவம்பர் மாதத்திற்கான, ரேஷன் பொருட்கள், அவர்களின் வீடுகளுக்கு நாளை 3 மற்றும் 4ம் தேதியில், வினியோகிக்கப்பட உள்ளன. தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை