புறநகர் ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி:சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லுார் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், அதிகளவில் தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் கந்தசாமி தலைமையிலான அத்துறையினர், மேற்கண்ட ரயில்களில், கவரைப்பேட்டை மற்றும் எளாவூர் ரயில் நிலையம் இடையே சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயில் பயணியர் இருக்கைக்கு கீழ், 30 மூட்டைகளில், 770 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.