உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 26 பேருக்கு மறுவாழ்வு நிதி வழங்கல்

26 பேருக்கு மறுவாழ்வு நிதி வழங்கல்

திருவள்ளூர், கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து மனம் திருந்திய, 26 பேருக்கு மறுவாழ்வு நிதி அளிக்கப்பட்டது.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதி அளிப்பு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, 26 பேருக்கு, தலா 50,000 ரூபாய் வீதம், 13 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரிகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், உதவி ஆணையர் - கலால் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை