உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருவள்ளூர்:திருவள்ளூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை அதிரடியாக அகற்றியது.சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வாகனங்கள், பூந்தமல்லி, மணவாளநகர் வழியாக, திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன. இந்த சாலைகளின் இருபுறமும் உள்ள கடைக்காரர்கள், முகப்பு பகுதியில் தங்கள் கடையின் விளம்பர பலகையினை சாலை போக்குவரத்துக்கு இடையூறாக அமைத்துள்ளனர்.இதனால், கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்லும் போது, இடையூறு ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என, நெடுஞ்சாலை துறையினர் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை வழங்கினர்.இருப்பினும் ஆக்கிரமிப்பு பகுதியை கடைக்காரர்கள் அகற்றாத நிலையில், நேற்று காலை நெடுஞ்சாலை ஜே.சி.பி.,யுடன் வந்தனர். காமராஜர் சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதியினை அகற்றும் பணியை துவக்கினர். சிலர், அதிகாரிகள் வந்ததும், தாங்களாகவே தங்கள் கடை முன் உள்ள 'ஷெட்களை' அகற்றினர். ஒரு சில கடைக்காரர்களுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி