உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசை - பிராட்வே தடத்தில் முறையாக பஸ் இயக்க கோரிக்கை

திருமழிசை - பிராட்வே தடத்தில் முறையாக பஸ் இயக்க கோரிக்கை

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் இருந்து, பிராட்வேக்கு இயக்கப்படும் மாநகர பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமழிசை பேரூராட்சியில் இருந்து, தினமும் ஏராளமானோர், சென்னை பிராட்வே பகுதிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதற்காக, திருமழிசை - பிராட்வேக்கு, காலை 6:30 மணிக்கு இயக்கப்படும் தடம் எண் '101 எக்ஸ்.ஐ.எப்.,' என்ற மாநகர பேருந்தில் பயணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, இந்த பேருந்து முறையாக இயக்கப்படவில்லை. இதனால், திருமழிசை பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, திருமழிசையில் இருந்து காலை நேரத்தில் பிராட்வேக்கு இயக்கப்படும் மாநகர பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருமழிசை பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை