உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்ரீபெரும்புதுாருக்கு பஸ் இயக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுாருக்கு பஸ் இயக்க கோரிக்கை

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதூருக்கு மாநகர பேருந்துகள் இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில்கள் வாயிலாக பல்வேறு ஊர்களில் இருந்து, திருவள்ளூருக்கு வருகின்றனர்.அவர்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மணவாள நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பேருந்து ஏறி செல்கின்றனர்.இதனால், அலைச்சல், கால விரயம் ஏற்படுகிறது. தற்போது, திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதுாருக்கு ஏராளமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அதில், சில பேருந்துகளை, காலை, மாலை நேரங்களில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாருக்கு செல்லும் வகையில் இயக்க வேண்டும் என, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை