உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூடப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

மூடப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை அருகே மூடப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவரைப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவராஜகண்டிகை ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஊராட்சியை சுற்றி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து, 13 கி.மீ.,யில் உள்ள தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை காவல் நிலையம் அமைந்துள்ளது. இதனால், இப்பகுதிகளில் முறையான போலீஸ் கண்காணிப்பு இல்லை என, கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, குருவராஜகண்டிகை கிராம எல்லையில், தனியார் தொழிற்சாலை சார்பில், புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2023 ஜூன் மாதம் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. போலீசார் புறக்காவல் நிலையத்தை முறையாக பயன்படுத்தாமல்பூட்டியிருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். போதிய போலீசார் இன்றி, புறக்காவல் நிலையம் இயங்க முடியாத சூழல் நிலவுவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, கிராம மக்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாதுகாப்பு கருதி, குருவராஜகண்டிகை புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை