உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பாழடைந்த ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை

 பாழடைந்த ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே பாழடைந்துள்ள ரேஷன் கடையை இடித்து, புதிததாக கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். கவரைப்பேட்டை அருகே கீழ்முதலம்பேடு கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் உள்ளது. ௧அங்கு, 600 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் பெற்று வந்தனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் ரேஷன் கடை இருந்ததால், பாதுகாப்பு கருதி எதிரே உள்ள பல்நோக்கு கட்டடத்தில், தற்காலிகமாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், கிராம மக்கள் அங்கு காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்வதில் பல சிரமங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே, பழைய ரேஷன் கடையை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ