உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு பஜாரில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை

பழவேற்காடு பஜாரில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை

பழவேற்காடு:பழவேற்காடு பஜார் பகுதியில், 'டாஸ்மாக்' கடை செயல்படுகிறது. பழவேற்காடு மீனவப் பகுதியில் உள்ள, 30க்கும் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களும், வெளியிடங்களில் இருந்து சுற்றுலாப் பயணியரும் இங்கு வந்து மதுபானங்களை வாங்கி குடிக்கின்றனர்.இவர்கள் மதுபானங்களை வாங்கிக் கொண்டு, பஜார் பகுதியில் உள்ள கடைகளின் அருகே அமர்ந்து குடிக்கின்றனர். 'டாஸ்மாக்' கடை அருகே, இந்தியன் வங்கி, அதன் ஏ.டி.எம். ஆகியவை உள்ளன. வங்கிக்கு வருபவர்கள், மதுப்பிரியர்களின் தொல்லையால் பெரும் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகின்றனர்.இதே பகுதியில் அமைந்துள்ள சர்ச்சுக்கு வருபவர்களுக்கும், 'டாஸ்மாக்' கடை இடையூறாக அமைந்து உள்ளது. வங்கி, கடைகள், சர்ச் என, எங்கும் மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.மாலை நேரங்களில், 'டாஸ்மாக்' கடை முன்பாக மதுப்பிரியர்கள் குவிந்து இருப்பதால், அவ்வழியாக செல்லும் பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேற்கண்ட, 'டாஸ்மாக்' கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ