உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏனாதிமேல்பாக்கம் - அயநல்லுார் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஏனாதிமேல்பாக்கம் - அயநல்லுார் சாலையை சீரமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி,:ஏனாதிமேல்பாக்கம் முதல் அயநல்லுார் சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் இருந்து அயநல்லுார் கிராமம் வரையிலான சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள பிற மாவட்ட சாலையாகும். அந்த சாலையில் அயநல்லுார் ஏரி அருகே சாலையில் பல விரிசல்கள் கண்டும், பல இடங்களில் பள்ளங்களும் காணப்படுகின்றன. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மாநில நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அந்த சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை