உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

மழைநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த நத்தம் கிராமத்தில் இருந்து பஞ்செட்டி, நெடுவரம்பாக்கம், மாதவரம் வழியாக ஆமூர் பாசன ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.கால்வாய் முழுதும், 15அடி உயரத்திற்கு கோரைப்புற்கள் வளர்ந்து உள்ளன. இருபுறமும் புதர்கள் மண்டியும், குப்பை கழிவுகள் குவிந்தும் இருக்கின்றன.பல ஆண்டுகளாக கால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதால், மழைக்காலங்களில் ஆமூர் ஏரி நீர்வரத்து இல்லாமல் உள்ளது.கடந்த ஆண்டு மழையின்போதும் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டுள்ளது. ஏரியை நம்பி, அருகில் உள்ள நெடுவரம்பாக்கம், மாதவரம், ஆமூர் கிராமங்களில் விவசாயம் பாதித்து உள்ளது.அடுத்து வரும் பருவ மழைக்கு முன், வரத்துக்கால்வாய் முழுதும் துார்வாரி, சீரமைத்து, ஏரிக்கு மழைநீர் வருவதை நீர்வளத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை