உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை

குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமலிங்காபுரம் கிராமம். இங்கு அரசு துவக்கப்பள்ளி சாலையில், 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின், கூடுதல் குடிநீர் தேவைக்காக அதே தெருவில் பள்ளி அருகே ஊராட்சி நிர்வாகம், 10 ஆண்டுகளுக்கு முன் சிறுமின் விசை குழாயுடன் தொட்டி அமைத்தது.இப்பகுதிவாசிகள் வீட்டு உபயோகத்திற்கு இந்த நீரை பயன்படுத்தி வரும் நிலையில் மூன்று ஆண்டுகளாக குடிநீர் தொட்டி விரிசல் அடைந்து, குழாய்கள் உடைந்த நிலையில் உள்ளது.எனவே, பழுதடைந்த குழாயை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை