உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிராம சாலையை சீரமைக்க கோரிக்கை

கிராம சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், வேலுார் கிராமத்தில் இருந்து, எரியபிள்ளைகுப்பம் ரெட்டிப்பாளையம் வழியாக பொன்னேரி செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்து உள்ளன. பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலை வழியாக பயணிக்கும்போது, பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சரளை கற்களில் இருசக்கர வாகனங்கள் சிக்கி, நிலை தடுமாறுகின்றன. அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. அவ்வழியாக செங்கல் ஏற்றி செல்லும் லாரிகள், பள்ளிவாகனங்கள் வளைந்து வளைந்து பயணிக்கின்றன.பள்ளங்களில் கொட்டப்பட்ட மண் மற்றும் செங்கல் துகள்கள் புழுதியாக பறக்கிறது. வாகன ஓட்டிகள் தினமும் பெரும் சிரமத்திற்கு இடையே பயணித்து வருவதால், மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ