ஊராட்சிகளில் சிசிடிவி பகுதிவாசிகள் கோரிக்கை
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை காவல் உட்கோட்ட பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளன. சில சம்பவங்களில் குற்றவாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். அத்திமாஞ்சேரிபேட்டையில் ஊராட்சி சார்பில், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் 'சிசிடிவி' பொருத்தப்பட்டுள்ளன. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து, அத்திமாஞ்சேரிபேட்டை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல், அனைத்து ஊராட்சிகளிலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிசிடிவி பொருத்தப்பட்டு இருந்தால், கொள்ளையர்கள் கண்காணிப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விடுவார்கள் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.