மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
1 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
1 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
2 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
2 hour(s) ago
கடம்பத்துார், : கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, கல்லம்பேடு ஊராட்சி. இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன், மப்பேடு செல்லும் சாலையில், ஏரிக்கரை அருகே, 2004 - 05ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மகளிர் சுகாதார வளாகத்தை, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தினர்.இந்நிலையில், பராமரிப்பில்லாமல் பூட்டிக் கிடந்த இந்த மகளிர் சுகாதார வளாகத்தை ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, 2018 - - 19ம் ஆண்டு, பொது நிதியின் கீழ், 76,000 ரூபாய் மதிப்பில், மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்தது. ஆனால் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.மேலும், மகளிர் சுகாதார வளாகம் பூட்டியே இருப்பதால், குப்பை கொட்டும் இடமாக மாறி, புதர் மண்டி வீணாகி வருவது அப்பகுதி பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும், மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, இப்பகுதி பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago