உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதருக்குள் மாயமாகி வரும் சுடுகாடு கொண்டஞ்சேரி பகுதிவாசிகள் அவதி

புதருக்குள் மாயமாகி வரும் சுடுகாடு கொண்டஞ்சேரி பகுதிவாசிகள் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் உள்ள கொண்டஞ்சேரி - திருப்பாச்சூர் நெடுஞ்சாலையோரம், கூவம் ஏரியிலிருந்து ஆற்றுக்கு வரும் இணைப்புக் கால்வாய் அருகே சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.புதிய காலனி பகுதிவாசிகளுக்கான, இந்த சுடுகாடு பகுதியில் கடந்த 2013-14ம் ஆண்டு 3.18 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், கை பம்பு, எரிமேடை மற்றும் சிமென்ட் சாலை சீரமைக்கப்பட்டது.இந்நிலையில் போதிய பராமரிப்பில்லாமல் தற்போது இந்த சுடுகாடு புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர் உடலை சுடுகாடு பகுதிக்கு கொண்டு வரும் போது பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சா்ட்டுகின்றனர். புதருக்குள் சுடுகாடு மாயமாகி வருவது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் கொண்டஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட புதிய காலனி சுடுகாடு பகுதியை சீரமைத்து தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை