உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை பகுதிவாசிகள், ரயில் பயணியர் அவதி

ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை பகுதிவாசிகள், ரயில் பயணியர் அவதி

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், 300க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இச்சாலையை பல்லாயிரக்கணக்கான ரயில் பயணியர் மற்றும் பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.சாலையோர ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலைய சாலை நுழையும் இடத்தில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பழக்கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், 8 அடி சாலையாக குறுகியுள்ளது.இதனால், பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் நிலைய சாலைக்குள் நுழைய முடியாமல், ரயில் பயணியர் தவித்து வருகின்றனர். பல சமயம் குறித்த நேரத்தில் ரயில் நிலையம் செல்ல முடியாமல், ரயிலை தவறவிட நேரிடுவதாக ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர்.ரயில் நிலைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, கவரைப்பேட்டை போலீசார் அகற்ற வேண்டும். சாலையை விரிவாக்கம் செய்ய கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் மற்றும் கவரைப்பேட்டை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை