உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வருவாய் துறை சங்க கூட்டமைப்பு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

வருவாய் துறை சங்க கூட்டமைப்பு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

திருவள்ளூர், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மாநிலம் தழுவிய பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.சி.வி.நாயுடு சாலை - நேதாஜி சாலை சந்திப்பில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக துவங்கி, கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.பின், கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியில் பேசிய சங்க நிர்வாகிகள், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரிவோருக்கு உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 'வருவாய் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்க கூடாது' உள்ளிட்ட ஏழு அம்சகோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.முன்னதாக நடைபெற்ற பேரணி காரணமாக, திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ