உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி சமையல் அறையில் அரிசி மூட்டை திருட்டு

பள்ளி சமையல் அறையில் அரிசி மூட்டை திருட்டு

கும்மிடிப்பூண்டி: அரசு பள்ளி சமையல் அறையின் பூட்டை உடைத்து, அரிசி மூட்டையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி அருகே வல்லமேடுகுப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தீபாவளி விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, பள்ளி சத்துணவு சமையல் அறை பூட்டு உடைக்கப்பட்டு, அரிசி மூட்டை ஒன்று மாயமானது தெரியவந்தது. ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி