உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பத்மாபுரம் ரேஷன்கடைக்கு செல்ல பாதை வசதி அவசியம்

பத்மாபுரம் ரேஷன்கடைக்கு செல்ல பாதை வசதி அவசியம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் கிராமம், சோளிங்கர் அருகே, வாலாஜாபேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ரேஷன்கடை, சானுார்மல்லாவரம் கூட்டு சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைக்கு சீரான பாதை வசதி இல்லை. கழிவுநீர் கால்வாயை கடந்து தான் ரேஷன் கடைக்கு செல்ல முடியும். இதற்காக, கால்வாய் மீது பாறை ஒன்று போடப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடையை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை சுமந்து கொண்டு இந்த வழியாக வரும் போது, கால் இடறி பள்ளத்தில் விழும் நிலை ஏற்படுகிறது. ரேஷன் கடைக்கு சீரான பாதை வசதி அமைக்கவும், அதை சுற்றியுள்ள புதர்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை