உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகனங்களை அகற்றாமல் சாலை அமைப்பு ஊத்துக்கோட்டையில் விநோதம்

வாகனங்களை அகற்றாமல் சாலை அமைப்பு ஊத்துக்கோட்டையில் விநோதம்

ஊத்துக்கோட்டை:சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றிவிட்டு சாலை அமைக்காமல், அதற்கு வழி விட்டு அமைத்ததால், ஊத்துக்கோட்டை மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை 36 கி.மீ., உடையது. இதன் இடையே, மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி மற்றும் இணைப்பு சாலை வழியே, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், இச்சாலை வழியாக சென்று வருகின்றன. தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலை குண்டும், குழியுமாக இருந்தது. தேர்வாய்கண்டிகை தொழிற்பூங்காவில் இருந்து, உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை எடுத்து வரும் கனரக வாகனங்கள் கடும் அவதிப்பட்டன. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சமீபத்தில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணி துவங்கியது. நாகலாபுரம் சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களை அகற்றாமல், அவற்றுக்கு வழிவிட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சாலை சீராக இல்லாமல், வளைந்து வளைந்து செல்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முறையாக சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை