உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்:திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்றுமுன்தினம் நடந்தது. பேரணிக்கு எஸ்.பி., சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார்.பேரணியில், மாணவ - மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினர். இந்த பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி காமராஜர் சிலை வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிகுமார் - பூந்தமல்லி, சிவனாந்தம் - செங்குன்றம், மோட்டார் வாகன ஆய்வளார்கள் குணசேகரன், காவேரி, கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !