உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேருந்தில் ரூ.1.25 கோடி பறிமுதல் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு

பேருந்தில் ரூ.1.25 கோடி பறிமுதல் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் எடுத்துச் சென்ற, 1.25 கோடி ரூபாய் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு, காஞ்சிபுரம் போதை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று சோதனை மேற்கொண்டனர். ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன், 29, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், 26, ஆகியோர், உரிய ஆவணங்கள் இன்றி, 1.25 கோடி ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி