கத்தி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி
திருத்தணி: ஹார்டுவேர் நிறுவன முகவரை கத்தியை காட்டி மிரட்டி, 17.50 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர் திருவள்ளூர், ஆயில்மில் பகுதியில் உள்ள டி.ஆர்.எஸ் ஹார்டுவேர் நிறுவனத்தில் முகவராக பணிபுரிந்து வருபவர், கார்த்திகேயன், 40. இவர் நேற்று முன்தினம் திருத்தணி உள்ள பல்வேறு கடைகளில் இருந்து, 17.50 லட்சம் ரூபாய் வசூல் செய்தார். பணத்துடன், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருத்தணி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில், கார்த்திகேயனை, நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது. பின் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி, கார்த்திகேயன் வைத்திருந்த, 17.50 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்து தப்பியது. கார்த்திகேயன் கொடுத்த புகாரின்படி கனகம்மசத்திரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.