மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்
08-Sep-2025
திருவள்ளூர்:பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி சாலையில், ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், துாய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்தல் உட்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு காலமுறை ஊதியம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும். 'ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்' என, ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
08-Sep-2025