உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பருவமழையை எதிர்கொள்ள மணல் மூட்டைகள் தயார்

பருவமழையை எதிர்கொள்ள மணல் மூட்டைகள் தயார்

திருத்தணி:வருவாய் கோட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது ஏரி மற்றும் தடுப்பணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுக்க, நீர்வளத் துறையினர் மணல் மூட்டைகள் தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில் நீர்வளத்துறையினர், 79 ஏரிகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் நான்கு தடுப்பணைகளை பராமரித்து வருகின்றனர். அடுத்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்குகிறது. பலத்த மழை பெய்தால் ஏரிகள் நிரம்பி வழியும். மேலும், கொசஸ்தலை மற்றும் நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும். அப்போது, ஏரிகளின் கரைகள் உடைப்பு, மதகுகள் சேதம், கடைவாசல் சேதம் போன்ற காரணங்களால் தண்ணீர் வீணாக வெளியேறும். இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக, நீர்வளத்துறையினர் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருப்பர். தற்போது, நீர்வளத்துறையினர் திருத்தணி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்வதற்கு, 2,500 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். இதுதவிர, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை பகுதியிலும், நீர்வளத்துறையினர் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ