உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் படுகாயம்

ரயிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் படுகாயம்

திருவள்ளூர்:கடம்பத்துார் அடுத்த, காரணி பகுதியைச் சேர்ந்தவர் யேசுதாஸ் மகன் மார்ட்டின் லுாயிஸ், 15. திருவள்ளூரில் உள்ள, ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து சென்னையிலிருந்து, அரக்கோணம் செல்லும் புறநகர் மின்சார ரயிலில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார்.ரயில், திருவள்ளூரை தாண்டி சென்று கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து தவறி விழுந்தார்.இதில் படுகாயம்டைந்த அவரை, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக, திருவள்ளூர் ரயில்வே போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவககல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவிக்குப்பின், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை