பள்ளி மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகள் தமிழ்செல்வி, 12. இவர், பள்ளிப்பாளையம் அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை மாற்றுதிறனாளி.நேற்று முன்தினம் மாலை, தமிழ்செல்வியின் தாய் ரம்யா, பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிபோது, வீட்டின் படுக்கறையில், தமிழ்செல்வி மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டார்.அருகில் வசிப்பவர்களின் உதவியுடன், தமிழ்செல்வி மீட்கப்பட்டு, தேவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.அங்கு, முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்செல்வியின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் தமிழ்செல்வியின் வீட்டிற்கு சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீடு திரும்பி தமிழ்செல்வி, திடீரென துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் பெற்றோரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.