உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வர்ணம் பூசாத வேகத்தடைகள் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

வர்ணம் பூசாத வேகத்தடைகள் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டிபாளையம் கிராமம் முதல் நத்தம் வரையிலான, 3.2 கிமீ., சாலை, நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ள சாலையாகும். நபார்டு கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரண்டு மாதங்களுக்கு முன், மூன்று கோடி ரூபாய் செலவில் அந்த சாலை புதுப்பிக்கப்பட்டது.நத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேற்கண்ட சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி முகப்பில் உள்ள சாலையில், இரு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.ஆனால் அந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடைகள் இருந்தும், விபத்து அபாய பகுதியாக மாறியுள்ளது. வேகத்தடை இருப்பது கண்ணுக்கு புலப்படாததால், தடுமாறும் வாகனங்களுக்கு இடையே பள்ளி மாணவர்கள் ஆபத்தாக பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, உடனடியாக அந்த வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும் என நத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை