உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு புத்தகம், சீருடை அனுப்பி வைப்பு

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு புத்தகம், சீருடை அனுப்பி வைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினமே புத்தகம், சீருடை வழங்குவதற்காக, வெள்ளியூரில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது.திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டங்களில், 984 ஆரம்ப பள்ளி, 257 நடுநிலை, 130 உயர்நிலை மற்றும் 119 மேல்நிலை என, மொத்தம் 1,490 பள்ளிகள் உள்ளன.அந்த பள்ளிகளில், 1.90 லட்சம் பேர் பயின்று வருகின்றனர். பள்ளிகளுக்கு ஆண்டு தேர்வு நிறைவடைந்து, கோடை விடுமுறைக்கு பின், நாளை அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.அவற்றில், ஆறு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, பள்ளி திறந்த முதல் நாளிலேயே தமிழக அரசு சார்பில், இலவச நோட்டு, புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்பட உள்ளது. இதற்காக, திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், அனைத்து பள்ளி மாணவ - மாணவியருக்கும் நோட்டு, புத்தகம் மற்றும் சீருடைகள் வரவழைக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டிருந்தது.நாளை பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், வெள்ளியூரில் இருந்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நோட்டு, புத்தகம் மற்றும் சீருடை அனுப்பி வைக்கும் பணி துவங்கியது.அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் நோட்டு, புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. அவற்றை பள்ளி ஆசிரியர்கள் பெற்று, தங்கள் பள்ளிகளுக்குச் கொண்டு சென்றனர். மீதமுள்ள பள்ளிகளுக்கும், இன்று மாலைக்குள் அனுப்பி வைக்கப்படும் என, மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.பள்ளி சீரமைப்பு பணி 'விறுவிறு'கோடை விடுமுறை முடிந்து, நாளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகளை சுத்தம் செய்து, உடைந்த ஜன்னல் கதவுகளை சீரமைத்து, கழிப்பறைகளை சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை